Thursday, February 19, 2004
போகிற பாதையெல்லாம் புற்பொட்டு
சொட்டிப்போகிறது பெருநகர்.
பாதத்து ஓரப்பல் உள்ளிடுக்கு
எல்லாம் துணுக்கொட்டு.
கரையெல்லாம்
கம்பம் முளைத்துக்
காலூறிக் கையூன்றும்.
கணம் குந்தி
கலைந்த தொலைவுள்
கடந்த தரை காண
இந்தத் திசை நோக்கி
மையம் மடி புண்ட
நகர்
நத்தை.
10:26 pm இற்கு ஞானி பதிவு செய்தது
Friday, January 16, 2004
ஒரு புறம் தூக்கி மறுபுறம் இருத்திய
அரைக்குண்டி வாழ்க்கை
07:19 pm இற்கு ஞானி பதிவு செய்தது
Thursday, January 15, 2004
இன்றைக்கென் கவிதை பற்றி எவருக்கும் தெரியாது.
இன்றைக்கென் கவிதை எதுபற்றியும் இராது -
இல்லை என்பது பற்றி; இருப்பது பற்றிக்கூட.
துள்ளித்திரிந்த காற்றில் கை
அள்ளித் தெளிந்து மிதக்க, நாள்.
உள்ளது அல்லது பிரியாது போம் பொழுது.
மெல்ல முகிழ்ந்தழியும் பொன்நிலவும்
கள்ளத்திற் சிரிக்கும் கன்னம் குழிக்க.
வந்ததைத் தின்று வருவதைக் கண்டு
சென்றதைப் பேசிச் செல்லவே இந்நாள்.
பெற்றது அழிவு; அற்றது செலவு;
ஒற்றுமை பார்க்கில் உள்ளது நிறைவு.
இப்படி ஒரு நாள் இன்றைக்கு மட்டுந்தான்,
கவிதைச் சொற்படி வளரும் என்றேன்; இன்றேல்,
இன்றைக்கென் கவிதை பற்றி எவருக்கும் தெரியாது.
04:24 pm இற்கு ஞானி பதிவு செய்தது
Wednesday, January 14, 2004
காக்காக்குளியல்
10:06 pm இற்கு ஞானி பதிவு செய்தது
Tokyo Teriyaki Chicken
08:17 pm இற்கு ஞானி பதிவு செய்தது